தீராத குடும்ப பிரச்சினை: மனைவி, மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த நபர்
தம்பதியர் இடையே உள்ள பிரச்சினை தொடர்பாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள தேவ்தீஹ் கிராமத்தை சேர்ந்தவர் ஷ்ரவன் ராம் (வயது 35). அவரது மனைவி சசிகலா (வயது 30). இவர்களுக்கு சூர்யா ராவ் (7) மற்றும் மித்து (4 மாத குழந்தை) ஆகிய இரு மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினருக்கு இடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராம், தனது மனைவி மற்றும் இரு மகன்களை கூர்மையான ஆயுதத்தால் குத்தியதில் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர். இதையடுத்து ராம் வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி போலீசார் ராமின் குடும்பத்தாரிடம் விசாரித்தபோது, அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை இருப்பதாகவும், இதுதொடர்பாக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.