மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு


மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:45 PM GMT)

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து

கர்நாடக சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் மாதம் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல், அதாவது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதற்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும், வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு, அதற்கான சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது.

ஜூன் 27-ந் தேதி இறுதி வாக்காளர்கள்...

சட்டசபை தேர்தலுக்காக தயார் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தொகுதி வாரியாக வாக்காளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணிகளை நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை மேற்கொள்ளவும், அதன்பிறகு வருகிற 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை வாக்காளர்கள் பட்டியலை பரிசீலனை நடத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி மாதிரி வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அந்த வாக்காளர் பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க வருகிற 19-ந் தேதி இறுதி நாளாகும்.

அதன்பிறகு, ஜூன் மாதம் 25-ந் தேதி வாக்காளர்கள் பட்டியல் 2-வது முறையாக பரிசீலனை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, ஜூன் மாதம் 27-ந் தேதி மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்ட அதிகாரிகளுக்கும், மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story