இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்


இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்
x

Image Courtesy : @DGPPunjabPolice twitter

பாகிஸ்தான் எல்லை அருகே வயல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் குர்ஜந்த் என்ற விவசாயிக்கு சொந்தமான வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 5 கைத்துப்பாக்கிகளை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த தகவலை பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹெராயின் கடத்தல் தொடர்பான விசாரணையின் போது ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


In the follow up of 13 kg #Heroin seizure @PunjabPoliceIndia, in a joint operation with #BSF have recovered 5 AK-47 rifles, 5 pistols & 9 magazines from #Ferozepur

As per the vision of CM @BhagwantMann, #PunjabPolice is committed to safe and secure Punjab. pic.twitter.com/XkLTdoj7vH

— DGP Punjab Police (@DGPPunjabPolice) November 30, 2022 ">Also Read:Next Story