அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? - தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு பேட்டி


அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? - தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு பேட்டி
x

பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. எம்.பி.,டி.ஆர்.பாலு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவர்னரின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினோம். சி.ஏ.ஏ. சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தினோம். சேது சமுத்திர திட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினோம்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் இடையூறு ஏற்படுத்துகிறார். பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படாதது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story