நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்தியபோது உ.பி. போலீஸ்காரர் சுட்டுக்கொலை


நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்தியபோது உ.பி. போலீஸ்காரர் சுட்டுக்கொலை
x

வாகனத்தில் சென்றவர்கள் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் நெடுஞ்சாலை புறக்காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர், பேத்ஜீத்சிங்.

நேற்று பணியில் இருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காண்பித்தார்.

ஆனால், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பேத்ஜீத்சிங், தனது மோட்டார் சைக்கிளில் அந்த வாகனத்தை துரத்தி சென்றார்.

அப்போது, வாகனத்தில் சென்றவர்கள் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து, பேத்ஜீத்சிங் அதே இடத்தில் உயிரிழந்தார்.


Next Story