மும்பை: கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண் உயிரிழப்பு !


மும்பை: கார் மோதிய விபத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண் உயிரிழப்பு !
x
தினத்தந்தி 19 March 2023 10:52 AM GMT (Updated: 2023-03-19T19:38:28+05:30)

விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

மும்பை,

தெற்கு மும்பையில் உள்ள வோர்லி பகுதியில் இன்று காலை ராஜ்லஷ்மி என்ற பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக அப்பெண் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அப்பெண் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

காலை 6.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வோர்லி காவல்நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story