அரசியலை வியாபாரமாக பார்க்கிறார்; ராகுல் மீது ஸ்மிரிதி இரானி தாக்கு
அரசியல் என்பது காங்கிரசுக்கு வியாபாரம் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக செய்வதற்கு எதுவும் இல்லை என ஸ்மிரிதி இரானி கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "வெறுப்புணர்வு சந்தையில் நாம் அன்புக்கடைகளைத் திறப்போம்" என தான் இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது கோஷமாகக் கூறியதை நினைவுபடுத்தினார். இதை உ.பி.யில் உள்ள அமேதியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, அந்தத் தொகுதியின் எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி சாடினார். அப்போது அவர், "காங்கிரசார் ஒரு கடை திறப்பதைப் பற்றி பேசுகிறார்கள். அரசியல் என்பது அவர்களுக்கு வியாபாரம் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக செய்வதற்கு எதுவும் இல்லை" என கூறினார்.
Related Tags :
Next Story