இளம்பெண் கொலையில் காதலன் கைது


இளம்பெண் கொலையில் காதலன் கைது
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இளம்பெண் கொலையில் காதலன் கைது செய்யப்பட்டார்.

ஒயிட்பீல்டு:

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே கோடிஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அகன்ஷா (வயது 23) என்ற இளம்பெண் வசித்து வந்தார். அவரும், ஆந்திராவை சேர்ந்த அர்பித் (வயது 29) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். அகன்ஷாவுக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும், ஆந்திராவில் இருந்து அர்பித், பெங்களூருவில் அகன்ஷா வசித்து வரும் குடியிருப்புக்கு வந்தார். பின்னர், அதுகுறித்து கேட்டு இளம்பெண்ணுடன் அவர் வாக்குவாதம் செய்தார். அந்த சமயத்தில் அர்பித், அகன்ஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து குடியிருப்பில் இருந்தவர்கள் ஜீவன்பீமா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த கொலை நடந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அர்பித்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அர்பித் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று அர்பித்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story