மராட்டியத்தில் 20 ஆயிரம் போலீஸ் பணியிடம் நிரப்பப்படுகிறது-மந்திரி சபையில் ஒப்புதல்


மராட்டியத்தில் 20 ஆயிரம் போலீஸ் பணியிடம் நிரப்பப்படுகிறது-மந்திரி சபையில் ஒப்புதல்
x
தினத்தந்தி 29 Sep 2022 3:45 AM GMT (Updated: 29 Sep 2022 3:46 AM GMT)

மராட்டியத்தில் புதிதாக 20 ஆயிரம் போலீஸ்காரர்களின் பணியிடங்களை நிரப்ப மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

மும்பை,

மராட்டியத்தில் புதிதாக 20 ஆயிரம் போலீஸ்காரர்களின் பணியிடங்களை நிரப்ப மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

போலீஸ் பணியிடம்

மராட்டிய மந்திரி சபை கூட்டம் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் போலீஸ் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த ஆண்டு காலியாக உள்ள 7 ஆயிரத்து 231 போலீசாரின் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை போலீஸ் துறையின் பணிச்சுமையை கணிசமாக குறைக்கும் என்று முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருணைத்தொகை

இதேபோல மந்திரி சபை கூட்டத்தில் வன விலங்குகளால் கொல்லப்படும் வனத்துறை அதிகாரிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் கருணை தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல வன விலங்குகள் தாக்குதலில் ஊனமுற்ற வன அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரமும், அதே போல பாதிக்கப்பட்ட சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும் என தெரிகிறது.


Next Story