காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

புதுக்கோட்டையில் காணாமல்போன 115 செல்போன்களை மீட்டு போலீசார் அதன் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான காணாமல் போன செல்போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பிரபாகரன் தலைமையில் கடந்த 3 மாதங்கள் சைபர் கிரைம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் 115 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.17¼ லட்சமாகும்.

இதையடுத்து, கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று உரிய நபர்களிடம் வழங்கினார். கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி வரை கண்டுபிடிக்கப்பட்ட 118 செல்போன்கள் உள்பட இதுவரையில் 2 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 11 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 583 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story