காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 117 பேர் கைது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 117 பேர் கைது
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்ற 117 பேர் கைது செய்யப்பட்டு, 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தோம்.

அதன்படி காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சுமார் 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 44 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இளம் சமூகத்தின் கனவுகள், லட்சியங்களை சீரழிக்கும் போதை பொருள் விற்பனையை தடுத்து, நடவடிக்கை எடுத்து வரும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story