118-வது பிறந்தநாள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை


118-வது பிறந்தநாள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 27 Sep 2022 4:05 AM GMT (Updated: 28 Sep 2022 12:35 AM GMT)

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Live Updates

 • 27 Sep 2022 9:28 AM GMT

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்


 • 27 Sep 2022 7:10 AM GMT


  தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பின்னர், 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் 'தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

  தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனார் அவர்களது 118-ஆவது பிறந்தநாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர்! பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 • 27 Sep 2022 6:21 AM GMT

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார். 'தினத்தந்தி' பத்திரிக்கையை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றியவர் சி.பா.ஆதித்தனார் என்றார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

 • 27 Sep 2022 5:40 AM GMT

  சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் - தமிழிசை சவுந்தரராஜன்

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

  சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

 • 27 Sep 2022 5:03 AM GMT

  சாமானியர்களும் பத்திரிக்கை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார் - ஓ.பன்னீர் செல்வம்

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அதன் பின்னர் ஓ. பன்னீர் செல்வம் கூறியதாவது:-

  அனைத்து தமிழர்களையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்த பெருமை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரையே சேரும் என்றார். மேலும், பத்திரிக்கை துறையில் சி.பா.ஆதித்தனார் படைத்த வரலாற்றை, உலக தமிழர்கள் பறைசாற்றுவார்கள் என்றும், சாமானியர்களும் பத்திரிக்கை படிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் சி.பா.ஆதித்தனார் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

 • 27 Sep 2022 4:54 AM GMT

  இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும் என்று கூறினார்.

 • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்-அமைச்சர் சாமிநாதன்
  27 Sep 2022 4:30 AM GMT

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்-அமைச்சர் சாமிநாதன்

  அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும். சாமானியர்களும் பத்திரிகை படிக்கும் வகையில் செயல்படும் 'தினத்தந்தி' நாளிதழ்.நாட்டு நடப்பை மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் செல்லும் தினத்தந்தி பத்திரிகை என அமைச்சர் கூறினார்.

 • 27 Sep 2022 4:23 AM GMT

  'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும், 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இவர்களை தவிர, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 • 27 Sep 2022 4:21 AM GMT

  தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா-தமிழக அரசு சார்பில் மரியாதை

  தமிழர் தந்தை' என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

  அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  இந்த நிகழ்ச்சியின் போது தினத்தந்தி ஊழியர்கள் பங்கேற்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Next Story