செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது


செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது
x

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வந்து நின்ற சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது.

செங்கல்பட்டு

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினம்தோறும் சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம் போல நேற்று காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரெயில் நிலையம் வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து மாலை மீண்டும் ஆந்திர மாநிலம் புறப்படுவதற்காக ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் சுத்தம் செய்த போது, அதில் கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் இருந்ததை கண்டனர். உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து சோதனை செய்தனர். அப்போது ஒரு பையில் 3 பண்டல்கள் வீதம் மொத்தம் 6 பண்டல்களில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விரைவு ரெயிலில் கஞ்சா கடத்தியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story