12 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


12 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
x
சென்னை

சென்னை,

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தொழிலாளர் நல திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறவேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 12 தொழிற்சங்க கூட்டமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டம் இயற்றப்படக்கூடாது. விலைவாசி உயர்வுக்கான தீர்வினை கொண்டு வரவேண்டும். மணிப்பூர் கலவரங்கள் குறித்து மோடி பதில் சொல்லவேண்டும் எனப்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ. மாநிலத்தலைவர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் தலைவர் குசேலர், எம்.எல்.எப். தலைவர் அந்திரிதாஸ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி. அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story