சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான ரெயில்வே போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் 8-வது நடைமேடையில் வந்து நின்றது.

அந்த ரெயிலில் இருந்து இறங்கி வந்த ஒருவர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை போலீசார் மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் 15 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவர் பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த முகமது ஷரி அலாம் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 15 கிலோ புகையிலையை பறிமுதல் செய்து போதைபொருள் தடுப்புப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.


Next Story