கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டுபோனது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தீனதயாளன் நகர், 4-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியரான இவர், வெளியூர் சென்றிருந்த நிலையில், இவரது மனைவி கீதாஞ்சலி (25) வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டு நேற்று வீட்டுக்கு திரும்பி வந்தாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 16 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தவிர கவரைப்பேட்டையில் உள்ள மாரியப்பன் (38) என்பவருக்கு சொந்தமான பேக்கரியின் பூட்டை உடைத்தும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story