குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள கிடாரகுளம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மணிகண்டன் என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்பு என்ற அப்புரானந்தம் (வயது 42) மற்றும் இசக்கிபாண்டி (21) ஆகிய இருவரும் கடந்த மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் சண்முகநாதன் என்ற நெட்டூர் ராஜா (28), மாரிசெல்வம் என்ற மாரி (23) ஆகியோர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரைத்தார். இதனை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

1 More update

Next Story