குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x

திருவள்ளூர் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் பட்டாக்கத்தியுடன் தங்கியிருந்த 5 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஜோசப் தேவகுமார் (வயது35), திருவள்ளூரை அடுத்த புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன்பிரபு (23), மப்பேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த டில்லிபாபு (27), புது இருளஞ்சேரி பகுதியை சேர்ந்த அவினாசி (19), நயப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரையும் மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்களில் மணிகண்டன், ஜோசப் இருவர் மீது பல்வேறு வழக்குகளில் சிறை சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மணிகண்டன், ஜோசப் தேவகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story