காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்


காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்
x

காஞ்சீபுரம் அருகே தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையில் 400 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர பணிக்காக 100 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை உணவகத்தில் இரவுநேர உணவை சாப்பிட்டனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் 20 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.

மேலும் அனைத்து தொழிலாளர்களும் பதற்றம் அடைந்த நிலையில் அவர்களையும் ஆஸ்பத்திரியில் அழைத்து வந்து பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story