பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
நடிகர் விஜய் நடித்த ஒரு திரைப்படத்தை பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் என்பவர் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
சென்னை,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள், தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக சித்தரித்து கருத்துகளை வெளியிட்டனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்யா ராஜேந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆபாசமாக சித்தரித்த நபர்களை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலையை சேர்ந்த விஜய் ரசிகர் ராம்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story