தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை–நெல்லை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை–நெல்லை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 16 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 9:48 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை–நெல்லை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

* சென்னை எழும்பூர்–நெல்லை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06017), சென்னை எழும்பூரில் இருந்து வரும் 17–ந்தேதி காலை 7 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11 மணிக்கு நெல்லை சென்றடையும்.

* நெல்லை–சென்னை எழும்பூர் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06018), நெல்லையில் இருந்து வரும் 20–ந்தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story