பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி ‘வாட்ஸ்–அப்பில்’ இழிவான தகவல்கள்


பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி ‘வாட்ஸ்–அப்பில்’ இழிவான தகவல்கள்
x
தினத்தந்தி 24 Oct 2017 4:45 PM GMT (Updated: 24 Oct 2017 1:52 PM GMT)

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரைச்சேர்ந்தவர் நிஷாராஜா (வயது 33).

சென்னை,

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இவர் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் தமிழக பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணியில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளேன். எங்கள் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து ‘வாட்ஸ்–அப்பில்’ தகவல்களும், புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரையே தரம் தாழ்ந்து விமர்ச்சிக்கிறார்கள். சாமானிய பெண்களை இவர்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பது இதன் மூலம் புரிகிறது. இதுபோல் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story