குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா?-அமைச்சர் ஜெயக்குமார்


குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா?-அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 Jan 2018 4:54 AM GMT (Updated: 2018-01-15T10:24:57+05:30)

பாஜகவும், ரஜினியும் இணைந்தால் தமிழகதலையெழுத்தை மாற்ற முடியும் என பேசிய குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.#Jayakumar


சென்னை, 

சென்னை ஆழ்வார் பேட்டையில் துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி பேசும் போது 

ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும்.

தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல், இது கழக கட்சிகளை போல் தன்னு டைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. கழகங் களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது.

என கூறினார். இதற்கு பதில் அளித்து பேசிய  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா?ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும்.குரு மூர்த்து குறித்து தி.மு.க கூறிய கருத்தோடு ஒத்து போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

#Jayakumar #Gurumurthy #Rajinikanth #BJP #ADMK

Next Story