சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் - கணவர் நடராஜன்


சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன்  - கணவர் நடராஜன்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:33 AM GMT (Updated: 15 Jan 2018 10:33 AM GMT)

எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன் என கணவர் நடராஜன் கூறினார்.#sasikalanatarajan

சென்னை, 

சசிகலாவின்  கணவர் நடராஜன் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு. மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும். ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்று விட்டார்கள். நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஜெயலலிதாவின் உழைப்பில் 2016-ல் வந்தது அ.தி. மு.க. அரசு. எனவே அ.தி. மு.க. அரசு நீடிக்க வேண்டும் என்றே சசிகலா விரும்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா? என்பதில்தான் சசிகலா மாறுபட்டிருக்கிறார். இந்த அரசின் செயல்பாடு மக்கள் விரோத செயல்பாடு என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

இன்றும் எனக்கு நாடு முழுவதும் செல்வாக்கு இருக்கிறது. ஒரே ஒரு போன் போட்டு என்னுடைய காரியத்தை சாதிக்க முடியும். ஆனால் எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் எடப்பாடி பழனி சாமி முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை மிரட்டுவது ஏற்பதற்கில்லை.

ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவை தான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியை கண்டார்.

இப்போது எனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். அதற்காக ஒரு நாளோ ஒரு வாரமோ பரோல் கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


 #sasikalanatarajan  #natarajan #OPS  #EPS

Next Story