கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 May 2018 11:49 AM GMT (Updated: 21 May 2018 11:49 AM GMT)

கர்நாடகாவில் குமாரசாமியின் முதல்வர் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். #MKStalin

சென்னை,

கர்நாடகாவில் நாளை மறுநாள் (மே - 30ம் தேதி) ஜனதாதளம்(எஸ்) கட்சித் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்கும் விழாவில் தமிழகத்தின் தி.மு.க கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி எச்.டி. தேவ கவுடா, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.

மேலும் இந்த பதவி விழாவின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதன்மூலம் ஸ்டாலின் அனைத்து மாநில கட்சித்தலைவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் ஸ்டாலின் சந்தர்பம் கிடைக்கும் பட்சத்தில் குமாரசாமியுடன், காவிரி பிரச்சனை பற்றி கலந்துரையாடுவது மற்றும் தமிழக விவசாயிகளுக்கு குருவை சாகுபடிக்கு தண்ணீர் தேவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதையடுத்து கர்நாடக சட்டசபையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 1 லட்சம் பேர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story