கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி


கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை - தந்தி டிவி
x
தினத்தந்தி 19 May 2019 3:29 PM GMT (Updated: 2019-05-19T20:59:14+05:30)

கோவை தொகுதியில் கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


கொங்கு மண்டலத்தின் அரசியலை பிரதிபலிக்கும் முக்கிய தொகுதியாக கோவை இருந்து வருகிறது. தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக), பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்), அப்பாதுரை (அமமுக), ஆர். மகேந்திரன் (மநீம), கல்யாணசுந்தரம் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். இங்கு அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி இருக்கிறது. கடும் போட்டிக்கு இடையே பா.ஜனதா முன்னிலை பெறுகிறது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

அதிமுகவின் கோட்டையான கோவை தொகுதியில் திமுக-அதிமுக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணி கட்சியான பா.ஜனதா வெற்றிப்பெற வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது. இங்கு அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 37-43 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 35-41 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று 7-10  சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என 5-8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

Next Story