மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த ஆண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.
மேட்டூர்,
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்த ஆண்டில் மட்டும் மேட்டூர் அணை நான்காவது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் அணை கட்டியபிறகு 45ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,946 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story