மாநில செய்திகள்

நடிகர் அஜித்தை திடீரென பாராட்டிய திமுக எம்.எல்.ஏ + "||" + DMK MLA suddenly praised actor Ajith

நடிகர் அஜித்தை திடீரென பாராட்டிய திமுக எம்.எல்.ஏ

நடிகர் அஜித்தை திடீரென பாராட்டிய திமுக எம்.எல்.ஏ
திமுக எம்.எல்.ஏ.வான டி.ஆர்.ராஜா நடிகர் அஜித்தை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ் திரைப்பட உலகில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் ‘தல’ என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தாலும், அரசியல் குறித்து தனது தனிப்பட்ட கருத்துகள் எதையும் அவர் வெளியிடுவதில்லை. இருப்பினும் அவ்வபோது சில அரசியல் தலைவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சமீபத்தில் அதிமுக அமைச்சர் ஒருவர் அவரைப்பற்றி பாராட்டி பேசியிருந்த நிலையில், தற்போது திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.ராஜா தனது டுவிட்டரில் அஜித்தை பாராட்டியுள்ளார். திமுக கட்சியின் மூத்த தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.ராஜா, நடிகர் அஜித்குமார் ரேசிங் விளையாட்டு மீது வைத்திருக்கும் ஆர்வம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் பேசிய காணொலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் ரேசிங் மீதான வேட்கை, அவரது இதயத்தில் இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது எனவும், அவரை போன்று மற்றவர்களும் தங்களது பிரபலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அஜித் ரசிகர்கள் பயன்படுத்தும், ‘தல போல வருமா’, ‘தல அஜித்’ என்ற வாசகங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல்
லேட்டஸ்ட் மாடல் பைக்கில் நடிகர் அஜித் வலம் வந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2. 'மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி' ஆட்டோவில் செல்லும் நடிகர் அஜித்!
நடிகர் அஜித் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.