ஆகஸ்ட் 8,10,13 தேதிகளில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 8,10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச்சின்னம் வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. அதேபோல ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்குப்பகுதி வரையும், ராஜாஜி சாலை, கொடிமரச்சாலையிலும் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story






