பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்: டெல்லி புறப்பட்டுச் சென்றார் நடிகை குஷ்பு


பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்: டெல்லி புறப்பட்டுச் சென்றார் நடிகை குஷ்பு
x
தினத்தந்தி 11 Oct 2020 10:04 PM IST (Updated: 11 Oct 2020 10:04 PM IST)
t-max-icont-min-icon

நடிகை குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து தற்போது டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு அண்மைக்காலமாக டுவிட்டரில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் இருக்கும் போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்று திரும்பிய குஷ்பு, இன்று இரவு 9.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது பாஜகவில் இணைவது பற்றி அவரிடம் பாஜகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அவரது கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி அவருடன் சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகரிகள் சில பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story