அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் சிறப்பு வழிபாடு
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருவாரூர்,
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர பிரசாரத்திலும் இருவரும் ஈடுபட்டனர். ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில், கமலா ஹாரிஸ் குடும்பத்தினரின் குலதெய்வ கோயிலான தர்மசாஸ்தா ஆலயத்தில் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், கிராமம் முழுவதும் விளம்பரப் பதாகைகள் வைத்து கமலா ஹாரிஸ் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story