'நீ தமிழனா?' - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ‘நீ தமிழனா?’ என்று கேள்வி எழுப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாமலைக்கு பாஜக கட்சி சார்பில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் வந்திருந்த சிலருக்கு சால்வை அணிவித்தார். அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா என்பவர் அண்ணாமலை அணியவந்த சால்வையை தடுத்தார். மேலும், அண்ணாமலையிடம், நீ தமிழனா? என கேள்வி எழுப்பிய ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீ தமிழனா?... அண்ணாமலையிடம் ராஜா வாக்குவாதம்#Annamalai | #BJPhttps://t.co/jW7Fgeyw6F
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2021
Related Tags :
Next Story