உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்பு திட்டம் - தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்பு திட்டத்தை முன்னெடுக்க தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீடு தொடர்பான சிறப்பு திட்டத்தை தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் இருந்தே முன்னெடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதி ஆதாரம் இல்லாததால் ஜனநாயகத்தின் உயிரோட்டமான உள்ளாட்சி அமைப்புகளில் பல வளர்ச்சிப் பணிகள் பாதியில் நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கிராம சபைக் கூட்டங்கள் சம்பிரதாய சடங்குகளாக முடிந்து போவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் கிராம சபைகள் மீதான மக்களின் நம்பிக்கை தகர்ந்து போவதாக தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் திமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கான சிறப்பு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என கமல்ஹாசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் pic.twitter.com/3qYd4Wehi4
— Kamal Haasan (@ikamalhaasan) July 21, 2021
Related Tags :
Next Story