தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது


தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது
x
தினத்தந்தி 22 July 2021 7:05 PM GMT (Updated: 2021-07-23T00:35:50+05:30)

2-வது டோசுக்கு பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டம்: தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.

சென்னை,

தமிழகத்துக்கு கடந்த திங்கட்கிழமை மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வழங்கப்பட்டன. இந்த தடுப்பூசிகள் உடனடியாக மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

அந்தவகையில் நேற்று சென்னை விமானநிலையத்துக்கு 69 ஆயிரத்து 970 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகள் குளிரூட்டப்பட்ட வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு, மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டது.

தற்போது வந்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் அனைத்து பயனாளிகளுக்கு 2-வது ‘டோஸ்’ போடுவதற்கு பயன்படுத்தப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

Next Story