இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு - மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி


இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு - மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 2 May 2022 1:40 PM IST (Updated: 2 May 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்காக, மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட டாக்டர்.எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி. இந்த மனிதாபிமான நடவடிக்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும். மேலும் இரு நாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



Next Story