காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2,118 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில்  2,118 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 20 ஆயிரத்து 575 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 7 லட்சத்து 36 ஆயிரத்து 58 பேருக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வகை கொரோனா தொற்றால் பொதுமக்களுக்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று 2,118 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story