ஆன்லைன் உணவு வினியோக போர்வையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது


ஆன்லைன் உணவு வினியோக போர்வையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

ஆன்லைன் உணவு வினியோக போர்வையில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வேளச்சேரி பகுதியில் கஞ்சா வீட்டிற்கே சென்று விற்பனை செய்யப்படுவதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்தபோது தனியார் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ரகுராம் (வயது 23) என்பவர் உணவு டெலிவரி செய்யும் போர்வையில் கல்லூரி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கஞ்சா வினியோகம் செய்வதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து உணவு டெலிவரி செய்யும் தாமோதரன் (22), பாஸ்கர் (59) ஆகியோரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து தாமோதரன், பாஸ்கர், ரகுராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story