திருச்சியில் தண்டவாளத்தின் நடுவே 2 லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது


திருச்சியில் தண்டவாளத்தின் நடுவே 2 லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் 3 பேர் கைது
x

தண்டவாளத்தின் நடுவே 2 லாரி டயர்களை வைத்த விவகாரத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி,

கடந்த 2-ந்தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் திருச்சி பிச்சாண்டார் கோவில்-வாளாடி ரெயில் நிலையங்களுக்கிடையே வந்து போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு ஓட்டுநர், ரெயிலின் வேகத்தை குறைத்தார்.

இதில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்ட நிலையில், மற்றொரு டயர் ரெயில் எஞ்சினில் சிக்கியது. இதையடுத்து, ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எஞ்சினில் சிக்கிய டயரை வெளியே எடுத்து சரி செய்த பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலை விபத்துக்கு உள்ளாக்கும் வகையில் டயர்கள் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக 3 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். திருச்சி மேல வாளாடியைச் சேர்ந்த அண்ணாவி பிரபாகரன், கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோரை கைது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story