ராமேசுவரம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல் - கடலோர காவல் படை நடவடிக்கை


ராமேசுவரம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல் - கடலோர காவல் படை நடவடிக்கை
x

ராமேசுவரம் அருகே 300 கிலோ கஞ்சாவை கடலோர காவல் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமேசுவரம் அருகே கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை அவர்கள் தடுத்தி நிறுத்த முயன்றனர்.

ஆனால் அதிவேகமாக சென்ற அந்த படகை துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த படகில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.


Next Story