காஞ்சீபுரம் அருகே தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் கருகின


காஞ்சீபுரம் அருகே தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் கருகின
x

காஞ்சீபுரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் கருகின.

காஞ்சிபுரம்

மின்கசிவு

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் விவசாயி. முத்துவேடு போகும் சாலையில் கோழி பண்ணை வைத்துள்ளார். முசரவாக்கம் பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு காரணமாக உயர் மின்னழுத்தம் மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ராஜேந்திரனின் கோழிப்பண்ணையில் உயர் மின்னழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

3 ஆயிரம் கோழிகள்

அதன் காரணமாக பண்ணையில் திடீரென தீப்பிடித்தது. தீ மள மளவென பரவி பண்ணை முழுவதும் சூழ்ந்தது. இதில் 3 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

இந்த விபத்து தொடர்பாக பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story