படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை


படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளை
x

படப்பை அருகே பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 31½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் ஏ.வி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சந்திரா (வயது 38) இவர் செங்கல்பட்டில் பொதுப்பணித்துறை கூடுதல் கோட்ட பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் கண்மணி (வயது 13). தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி சம்பந்தமாக சொந்த ஊரான விருத்தாசலத்திற்கு கடந்த 24-ந்தேதி மாலை தனது வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர் சொந்த ஊரில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் மாலை ஆதனூர் பகுதியில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரா உள்ளே சென்று பார்த்தார்.

உள்ளே இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 31½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்திரா மணிமங்கலம போலீசில் புகார் அளித்தார். மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் ஆகியோர் நேரில் சென்று வீட்டை சுற்றி ஆய்வு செய்தனர். காஞ்சீபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

2 தனிப்படை அமைக்கப்பட்டு நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story