கஞ்சா விற்ற 4 பேர் கைது - 11 கிலோ பறிமுதல்


கஞ்சா விற்ற 4 பேர் கைது - 11 கிலோ பறிமுதல்
x

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆரணி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சா சிக்கியது. விசாரணையில் அவர்கள் ஆரணி, சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சந்தோஷ்சிவம் (வயது20), நரேஷ் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆரணி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை விற்க முயன்ற சின்னக்கிளாம்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் (21) கைது செய்தனர். பின்னர் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த மராட்டியத்தை சேர்ந்த சிவசங்கர் ரெட்டி (54) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் ரெட்டியை கைது செய்தனர்.

1 More update

Next Story