கொலை முயற்சி வழக்கில் 4 பேர் கைது


கொலை முயற்சி வழக்கில் 4 பேர் கைது
x

காஞ்சீபுரத்தில் கொலை முயற்சி வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் நேற்று முன்தினம் மதியம் இருசக்கர வாகனத்தில் மடம் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். முன்விரோதம் காரணமாக காஞ்சீபுரம் தாயார்குளத்தை சேர்ந்த தியாகு என்ற தியாகராஜன் (32) ஸ்ரீதர் என்ற குள்ள ஸ்ரீதர் (30), வடிவேல் (36), பிள்ளையார் பாளையம், மடம் தெருவை சேர்ந்த குமரேசன் (64) ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் விஜய் மற்றும் அவரது நண்பரை துரத்தி சென்று தாக்க முயன்றனர்.

இது சம்பந்தமாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின்பேரில், காஞ்சீபுரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு லியஸ் சீசர் மேற்பார்வையில், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தாக்க முயன்றவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தியாகு, வடிவேல், குமரேசன், ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story