போலீஸ் ஏட்டை தாக்கியதாக 4 பேர் கைது


போலீஸ் ஏட்டை தாக்கியதாக 4 பேர் கைது
x

சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸ் ஏட்டை தாக்கியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி செய்பவர் ஸ்டாலின். இவர், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அவர் தாசூதீன் தெரு வழியாக சென்றார். அங்குதான் பிரச்சினை வெடித்தது. அங்கு 4 பேர் உட்கார்ந்து மதுஅருந்தி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி ஸ்டாலின் கூறினார்.

ஆனால் போதையில் இருந்த அவர்கள் கலைந்து செல்லாமல் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுஅருந்திய 4 பேரும் சேர்ந்து ஸ்டாலினை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களில் பாலமுருகன் என்பவர் தலைமைச்செயலக ஊழியர். தமிழ்செல்வன், விஜய் ஆகியோர் அரசு ஊழியர்கள் என்று கூறப்ப டுகிறது. ஜெயபால் என்பவர் கொத்தனார் வேலை செய்பவராம்.


Next Story