சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
x

திருவள்ளூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் பகுதியில் சூதாட்டம் ஆடுவதாக வந்த தகவலையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் காக்களூர் ஏரிக்கரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணிகண்டன் (வயது 35), வினோத்குமார் (39), ஜோதி ராமலிங்கம் (54), ரமேஷ் (47) ஆகியோர் அரசு அனுமதியின்றி பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கார்டுகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 50 போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.


Next Story