மேலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


மேலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

விருதுநகரில் தொழிலதிபர் கொலை வழக்கில் ேமலும் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

விருதுநகரில் கடந்த 25.7.2023 அன்று மாம்பழப்பேட்டையில் தொழிலதிபர் குமரன் என்ற குமரவேல் (வயது 47) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கனவே கடந்த 8-ந் தேதி 7 பேர் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டதற்காகவும், தொடர்ந்து குற்றச்செயல்களை ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த கொலை வழக்கு தொடர்பாக அரவிந்த் என்ற சேவு (27), விக்கி என்ற விக்னேஷ்வரன் (25), நவ்பல் (22), ஞானசேகரன் (58), விக்ரமன் (56) ஆகிய 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பரிந்துரை செய்தார்.அதன்பேரில் கலெக்டர் ஜெயசீலன் ே்மற்கண்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் மேற்படி 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story