தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்
தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
சென்னை,
தமிழகத்தின் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தை தணிக்க மக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பான கடைகளில் குவிகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 5 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. வேலூர் - 101.48 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி - 101.30 டிகிரி பாரன்ஹீட், திருச்சி - 101.30 டிகிரி பாரன்ஹீட், மதுரை - 101.12 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு - 100.76 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story