கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு - ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு


கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு - ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
x

கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சத்தியசீலன் (வயது 22), கொரட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணிகண்டன் என்ற கஞ்சாமணி (23), இம்மானுவேல் (29), அம்பத்தூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சதாசிவம் (38), சோழவரம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ராஜேஷ்குமார் (26), அஜித்குமார் (23) ஆகிய 6 பேரின் தொடர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story