இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 6 பேர் விடுவிப்பு


இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 6 பேர் விடுவிப்பு
x

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த 6 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களையும் கைது செய்து, அவர்களை இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து மீனவர்களை விடுதலை செய்ய இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மீனவர்கள் 6 பேரையும் இலங்கை கோர்ட் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 6 பேரும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Next Story