கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!


கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழப்பு- விழுப்புரம் விரைகிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
x
தினத்தந்தி 15 May 2023 11:20 AM IST (Updated: 15 May 2023 12:04 PM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் கூற விழுப்புரம் செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்ல உள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். அவர் இன்று பிற்பகலில் விழுப்புரம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story